Our Chennai Ainuruvars recent visit to Thiruvalangadu
Friday, December 4, 2009
Monday, November 9, 2009
Sunday, October 4, 2009
பாலகாடு விற்றுனியர் கோவில் வரலாறு
வணக்கம். நம்மவர்களின் குல தெய்வமான பாலகாடு விற்றுனியர் கோவில் வரலாறு பற்றி எனது தந்தையார் எழுதிய புத்தகத்தை இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இத்தருணத்தில் உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன் .இப்புதகத்தினப் படிக்க கீழ்க் கண்ட லிங்க்கினை கிளிக் செய்யவும் .
http://sites.google.com/site/modernsiva/palakkadu-temple-history
சிவப்பிரகாசம்
Monday, September 28, 2009
நமசிவாயம் வாழ்க
http://sites.google.com/site/modernsiva/namasivayam--vaalka
Friday, September 4, 2009
திருவாசகச் செல்வர்





காலம் சென்ற எங்கள் தந்தை கடந்த ௨000 ஆண்டு நமச்சிவாயம் வாழ்க என்ற நூலினை எழுதினார் .இந்நூல் இலவசமாக வெளியிடப்பட்டது . அனைத்து சிவன் கோவில் களிலும் தரப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை திருக்காரநீஸ்வரர் கோவிலிலும் விநியோகம் செய்யப்பட்டது . இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டம் ஒவ்வொறு துறையிலும் சிறந்த தொண்டினை செய்தவர்களுக்கு அத்தொண்டினைப் பாராட்டி விருது வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . அவ்வகையிலே 2001 ஆம் ஆண்டு ஆன்மீகத்தில் சிறந்து பணியாற்றியதற்கு திருவாசகச் செல்வர் என்ற விருதினை கொடுத்து சிறப்பு செய்தனர். அவ்விழாவின் புகைப்படங்களை மேலே காணலாம் .
இந்த நூலினை அனைவரின் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறோம் .கீழ்க்கண்ட லிங்கினை டைப் செய்தால் புத்தகத்தினை படிக்கலாம் .இப்புதகத்திணப் படிக்க adobe acrobat reader இருக்க வேண்டும். இல்லையேல் www.adobe.com இணைய தளம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
http://docs.google.com/?tab=3o#owned-by-me
Monday, August 31, 2009
உத்ரகிரியைப் பத்திரிக்கை
மறை வு :28.08.09

Sunday, August 9, 2009
Wednesday, May 6, 2009
கானல் காட்சி!
Saturday, April 25, 2009
அமரன் சிரிப்பே சிரிப்பு !
மலர்கின்ற மலரெல்லாம் மலரேயல்ல
மங்கையவள் பெற்றதுதான் மலரேயாகும்
புலர்கின்ற பொழுதெல்லாம் பொழுதேயல்ல
பூவையவள் கண்டதுதான் பொழுதேயாகும்
வீசிவரும் காற்றெல்லாம் காற்றேயல்ல
கைவீசிவரும் பிள்ளைபட்ட காற்றேகாற்று
பூசுகின்ற அத்தர்மணம் மணமேயல்ல
புகழ்பெற்ற பிள்ளைமேனி ம்ணமேயாகும்
இசைக்கின்ற இசையனைத்தும் இசையேயல்ல
இவள்பிள்ளை இசைப்பதுதான் இசையேயாகும்
பேசுகின்ற பேச்சனைத்தும் பேச்சேயல்ல
பேரனவன் மழலைமட்டும் பேச்சேயாகும்
மயக்குகின்ற மதுவனைத்தும் மதுவேயல்ல
" மது " பிள்ளை தேன்வாய்நீர் மதுவேயாகும்
அயலார்கள் சிரிப்பதெல்லாம் சிரிப்பேயல்ல
அமரன்வாய் சிரிப்பதுதான் சிரிப்பேயாகும் ! !
Thursday, April 23, 2009
இராமலிங்கம் ! [ 6-5-1982 ]
சோழனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான்
வாழவநத திருமகனோ வாய்நிறை சிரிப்பைக் கொண்டான்
தாழவந்த பருந்தின் வேகம் தவழ்வதிலே தானும் கண்டான்
கொட்டிவிட்ட தேளின் வேகம் கொண்டே நகரக்கண்டான்
எட்டிவிட்ட பொருளனைத்தும் எடுத்தெறிந்து உடையக்கண்டான்
தட்டித்தான் கேட்பதற்கு தனக்குநிகர் யார்தான் என்றான்
வெட்டிப்பேச்சு எதற்கு வேகமுள்ள பேரன் என்றேன்
நல்ல அழுகைமூலம் நாபிதன் தேவை சொல்வான்
கள்ள அழுகை காட்டி கனிவுடனே எடுக்கச்செய்வான்
பொல்லா தாமதத்தை பொறுப்பாக்கிப் பாலை மறுப்பான்
மல்லுக்கு நின்றாலும் வாய்வைத்து உறுஞ்சமாட்டான்
பேருக்கு புகழுக்குப் பேரன்தான் பிறந்துவிட்டான்
பேறுபெற்ற பாட்டனின் பெயரையே தானும்கொண்டான்
ஊருக்கு உலகத்துக்கு உயர்வோன்தான் வந்துவிட்டான்
பேரதனைச் சொல்லுகிறேன் பேரன்பெயர்" இராமலிங்கம் "
கணநாதன் அருளாலே களிப்பான வாழ்வு பெறுவான்
குணவதியாம் கலைமகளின் கனிவாலே கல்விபெறுவான்
தனமகளின் பார்வையினை தவறாதுதான் பெறுவான்
எனதான வேல்முருகன் எப்போதும் துணையிருப்பான் ! 
இயற்கையின் படைப்பில் விதிவிலக்காவார்
இருகால் கைகள் இவருக்கில்லை
வயது நாற்பத்தி ஐந்தானாலும்
வளர்ந்தது இரண்டடி மட்டுமேயாகும்
கர்னாடக சங்கீதக் கச்சேரி செய்வார்
கனிவாகப் பல மொழி பேசி எழுதுவார்
இடது கன்னம் தோள் இடையில்பென்சில்
இவர் வைத்து எழுதும் அழகே தனிதான்
குடியரசு தலைவர் முன் கச்சேரி செய்தார்
" குறையொன்றுமில்லை "பாடலைப் பாடினார் !
Tuesday, February 17, 2009
கோயிலுக்கு விளக்கேற்ற
கொண்டு செல்லும் எண்ணை
மீதமிருந்தால் வீட்டுக்கு
எடுத்து வரலமா ?
வரலாம்
வெள்ளிக்கிழமை வீட்டில்
அம்பிகைக்கு விளக்கேற்றலாமா ?
ஏற்றலாம்.
பல் விளக்கினால் பச்சைத் தண்ணியில்
வாய் கொப்பளிக்கலாமா ?
பஜனையில் பாடத்தெரியாதவர்
பாடலாமா ?
ஆடிவெள்ளி அம்பாசமுத்திரத்தில்
குளிக்கலாமா ?
வர வர பொது அறிவே
போய்விட்டது போங்கள் ! !
Sunday, February 15, 2009
ஆனந்தம் உன் இயல்பு ! !

ஆனந்தம் உன் இயல்பு ! !
ஆனந்தம் என்பது கடைச் சரக்கல்ல
அது உன் உள்ளத்து உணர்வே ஆகும்
ஏனந்த இயல்பை மறந்து மறந்து விட்டாய் ?
எதிர்மறை விளைவால் ஏங்குகிறாய்
தீதும் நன்றும் பிறர் தருவதல்ல
தீமையும் நன்மையும் உன் படைப்பாகும்
சூதும் வாதும் வேதனை செய்யும்
சூழ்நிலை மாறத் துணை உன் உழைப்பு
உண்மை பேசு உழைப்பை நாடு
உள்ளத்துக் கள்ளம் உதறித்தள்ளு
Friday, February 13, 2009
Tuesday, February 10, 2009
Monday, February 9, 2009
போட்டால் சத்தம் பெரிதாகும்
Sunday, February 8, 2009
தெப்பத் தேர் !
படியளக்கிறான் சொக்கன் (மதுரை படியளக்கும் திருவிழா)
கச்சா எண்ணையே கருவியாயானது
மலைபோல் விளைந்த பொருள்களெல்லாம்
மாயமாய் மறைந்து எங்கு போனது?
தலைக்கு தலை விலையை ஏற்றி
தவிடெல்லாம் தங்கத்தின் மதிப்பானது
நிலை குலைந்த மனிதனுக்குப் படியளந்து
நிம்மதியைத் தருகின்றான் சொக்கன் இன்று.
அரசியல்
ஓட்டு இலவசம் 1
உடை இல வசம் வீ ட்டு மனை இலவசம்
நிலப்பட்டா இலவசம் இடுபொருளுமிலவசம்
அரிசி கிலோ இரண்டு ரூபாய்
மளிகைப் பொருள் மலிவு விலை
ஆக்குவதற்கு அடுப்பு இலவசம்
வெளிச்சத்துக்கு மின்விளக்கு இலவசம்
பார்த்து பகுத்தறிவை வள்ர்க்க
வண்ணத் தொலைக்காட்சி இலவசம்
குடும்பம் மலர திருமணம் இலவசம்
கூடுதலாகக் கேட்பதும் இலவசம்
இத்தனை இலவசம் வாங்குபவர்
ஓட்டை இலவசமாய் போட்டால் என்ன ?!
Friday, February 6, 2009
திருவாதிரை சீர் மற்றும் பொங்கல் சீர்

- கும்பகோணம் திருவாளர்கள் SKRS.முத்துக்குமரன்,SKRC.ரத்தினசபாபதி,சந்திரசேகரன் குடும்பத்தினர எர்ணாகுளம் திருவாளர்கள் ARCR.பொன்னம்பலம்,சீனுவாசன் குடும்பத்தினர்க்கு . திருவாதிரை சீர் மற்றும் பொங்கல் சீர் வழங்கும் நிகழ்ச்சிகள் கடந்த ஜனவரி பத்து மற்றும் பதினான்காம் தேதியில் நடைபெறறன . சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
வேண்டாதவர் செய்தால் வெறுப்பு
வேண்டியவர் செய்தால் உவப்பு
மறறவர் பேசினால் அறுவை
நீங்கள் பேசும்போது அறிவுரை
நீங்கள் ஏற்பது எதுவானாலும்
அது சொர்கமாகிவிடும்
நீங்கள் எற்கமறுக்கின்ற்போது
அதுவே நரகமாகிவிடும்!
நல்லவர்களுக்கு நாளெல்லாம் இனிப்பு
அல்லாதவர்களுக்கு நாளும் க்சப்பு
எல்லாமே இருப்பது உங்கள்கையில்
உங்கள் தேர்வு இனிப்பா ?கசப்பா ?
Tuesday, February 3, 2009
அறுவை !
வீட்டிற்கு வந்து விட்டாராமே ?
அவர் இதைப்போல் எத்தனை
" அறுவை"களைப் பார்த்திருக்கிறார் !!
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆசையுடன் எடுத்துகொணட இவர்
அமெரிக்காவுக்குப் பாடுபட வீட்டில்
ஆண்பிள்ளை பிறந்திருக்கிரானாமே
கைகுலுக்கி " கங்கிராட்ஸ்" என்றார்
வாழ்கையின் லட்சியம் வழிதவறவில்லை !!
எல்லோரும் இந்நாட்டு முதல்வர்கள்
நாலுமுறை படம் பார்த்து ரசி
நல்லவனாக வருகிறார் என்றால்
அந்த கதாபாத்திரம் அப்படி
நடிகருக்கு ரசிகர் மன்றம் சரி
நாட்டையே தருவதென்றால் எப்படி
நாடாளுமன்றம் ரசிகர் மன்றமானால்
நல்லதான்னு கொஞ்சம் செப்பண்டி!!
பழமையும் புதுமையும்
பயத்தில் ஏற்பது அழகல்ல அதன்
பொருளை நன்றாய்ப் புரிந்துக்கொண்டு
போற்றவும் அகற்றவும் செய்துவிடு
அறிவியல் முன்னேற்றம் அடையா நாளில்
ஆளைதொட்டால் தீட்டு என்றார்
நெறிமுறை வாழ்வில் தவறிவிட்டு
நேர்த்திக்கடனதான் வழி என்றார் !
Sunday, February 1, 2009
பெருசு கொஞ்சம் நகரு 1
முளை வளர்கிறது செடி உயர்கிறது
செடி பூக்கிறது பூ காய்க்கிறது
காய் கனிகிறது கனி விழுகிறது
கனியின் விதையில் காலம் சுழல்கிறது
மனிதனின் இயற்கை சக்கரமும் இதுதான்
ஆனால் பழுத்த மனிதனுக்குப் பட்டம் "பெருசு"
பழுத்தோலை பார்த்து குருத்தோலை சிரிக்கிறது!!
Saturday, January 31, 2009
Thursday, January 29, 2009
திருமணப் பரிசு
எங்கே திருமணம் என்றாலும்
எப்போது இவள் போனாலும்
தப்பாது சின்ன கடிகாரம்
தகுதிக் கேற்ப இவள் கொடுப்பாள்
இங்கும் வரவேற்பு நடந்தது
இவளுக்கும் தோழியர் பரிசளித்தனர்
இருபது முப்பது கடிகாரங்கள்
இன்னும் பிரிக்க சில உள்ளன
ஏனென்று நாம் நினைக்கும்போது
நீ எதைக் கொடுத்தாய்
அதைப் பெறுவாய்
என்பது இதுவாக இருக்குமோ ?!
நன்கொடை
நல்ல நிகழ்ச்சிக்கு நன்கொடையாம்
பத்தாயிரம் அளிக்க அவன் நினைத்தான்
பத்திரிக்கை வர நாளாயிற்று
பாதி கொடுத்தால் போதுமேன்றான்
இரவும் பகலுமாய் இரண்டுநாளில் அது
இரண்டாயிரம் என்றான் மனைவி மூலம்
வருவதாக தொலைபேசியில் சொன்னார்கள்
இருப்பதைக் கொடுப்போம் வரட்டும் என்றான்
வந்தவர்களை எப்படி சும்மா அனுப்புவது
வந்த செலவுக்கு நூறு முடிவானது
Wednesday, January 28, 2009
Tuesday, January 27, 2009
நிம்மதி
நினைவில் செயலில் தானிருக்கு
மற்றவர் தேவைக் குதவும் போது
மனதில் தோன்றும் நிம்மதி
பெற்றவள் சிரிப்பைக் காணும்போது
பெருகும் அங்கே நிம்மதி
உற்றவள் பிடித்ததை வாங்கும் போது
உனக்கும் அவளுக்கும் நிம்மதி
குற்றம் குறைகளைத் தள்ளும்போது
கூடும் வாழ்வில் நிம்மதி !!
திருந்துங்கள்
நினைத்ததைச் செய்யுங்கள்
செய்வதை முடியுங்கள்
முடிந்ததை த திருத்துங்கள்
திருத்தத்தில் திறுந்துங்கள்!
சக்தி பெறு சக்தி கொடு !
அடங்கிக் கிடக்கும் சக்தியினை
அஷ்டாவதானம் செய்தாவது
ஆர்வமாய் மனிதன் திரட்டுகிறான்
அதற்குப் பெயரே " மின்சக்தி "
அது வந்தாலே இருள் விலகும்
இறை சக்தியை இறஞசிபெறு
இவ்வுலகம் அதனால் உயவடையும் !
Tuesday, January 20, 2009
ஏன மறுக்கிறாய்
பரிசும் விருதும் பாராட்டும்
பார்ப்பவர்க் கெல்லாம் கொடுப்பதில்லை
உரிய தகுதி உடையவர்க்கே
உழைக்கும் கூலி கிடைக்கிறது
மற்றவரைப் பாராட்ட மறுப்பவர்கள்
மனதில் கள்ளம் குடியிருக்கும்
எறறைக்கும் மனதைத் துய்மை யாக்கு
எழில்மிகு வாழ்க்கை வரும் உனக்கு
என்னத்த சாப்பிட்டு என்ன ?
இன்சுலின் போட வேண்டும்
உப்பு அதிகமானால்
உயர் ரத்த அழுத்தமாகும்
புளிப்பு என்றாலோ
பல் முழுதுமே கூசும்
கசப்பு சேர்த்தால்
கழுத்துக்குக் கீழ் போகாது
துவர்ப்பு உண்டால்
தொண்டை அடைக்கும்
காரம் வேண்டினால்
கண்டிப்பாக "அல்சராம்"
என்னத்த சம்பாரித்து
எதைத்தான் சாப்பிடுவியோ!?
Tuesday, January 13, 2009
தூக்கம் வருமா? ஏக்கம் தீருமா?
தன்னை யறியாது தூங்குவது ஏன்
நினைத்துப்பார் உன்மனதில்
நிம்மதி யப்போது நிறைந்திருக்கும்
விலை கொடுத்தாலும் கிடைக்காது
வீண் அரட்டை கை கொடுக்காது
உடலும் மனதும் களைக்கும் வரை
உழைப்பவர் ரகசியம் அறிந்திடுவோம்
திவிர வாதம்
தீவிர வாதம்
அப்பாவி மக்களையே
தப்பாமல் சுட்டுக் கொல்ல
அணிவகுத்து வந்தது யாரு
மதமென்ற பெயராலே
மக்களை அழிககுமந்த
மாபாவிகளுக் கெந்த ஊரு
அண்டை நாடா இருந்தாலே
சண்டை நாடா இருக்குமென்ற
அவசியம் வந்ததென்ன கூறு
ஆதிக்க வெரியரெல்லாம்
அழிந்து பட்ட கதைகளையே
அமைதியாக நினைத்துக் கொஞ்சம் பாரு
வாயுக்கும் வயிற்றுக்கும்
வாதம் செய்யும் இளைஞருக்கு
தீவிர வாதத்தோடு நீ போட்ட சோறு
அமைதி அன்பு நேயத்திலே
ஆடி வரும் கங்கை யாறாம்
மானுடத்தில் நீ கலந்த சேறு
அல்லாவும் ஆண்டவனும்
அருட் தந்தை யேசுவுந்தான்
சேர்ந்து ஒன்றாய் வந்தால் இதுதீருமா
தீரும் வரை காத்திருக்க
தீவிரத்தை தாங்கி நின்று
திகழும் உயிர்கள் இங்கேதான் இருக்குமா /
Monday, January 12, 2009
பொங்கல் வாழ்த்து 2009
கழனியில் கால் வைக்க வேண்டாம்
களத்தில் நெல் அடிக்க வேண்டாம்
கட்டிவெல்லம் வாங்க வேண்டாம்
இட்டமுடன் அரசு தரும் இலவசத்தில்
இனிய பொங்கல் படைப்போம் சரி
நட்டமின்றி நன்றி சொல்வது நாம்
ஆதவனுக்கா? அதன் சின்னத்துக்கா ?
பணம்...குணம்!
பணம்...குணம்!
பணம் காசு படைத்தவனுக்கு
பகல் இரவு தூக்கம் போச்சு
குணம் காத்து நின்றவனுக்கு
குறையில்லா வாழ்க்கை ஆச்சு
ஒன்று இருந்தால் ஒன்று இல்லை
இரண்டும் இருப்பதோ இறைவன் கருணை
நின்று நிதானித்து வாழ்க்கை நடத்து
நிச்சயம் இரண்டிலும் வெற்றி உனக்கு!!
Saturday, January 10, 2009
Tuesday, January 6, 2009
ஆபத்பாந்தவன்
ஆபத்து வந்ததென சொன்னவுடன்
அவநோடி வந்துமே உதவி நின்றான்
காபந்து செய்கின்ற கூட்டத்திலும்
கனிவாகப் பேசியே தனித்து நின்றான்
உயர்ந்த உள்ளதவன் யாரோவென
உதட்டைப் பிதுககினர் உறவினரும்
பிறர் அறியா ரகசியம் அவன் அறிவான்
'புரோநோட்டு காலாவதி ஆகுதென்று'