Saturday, January 31, 2009

முடிச்சை அவ்ழ்க்காதே

ஊருக்குப் புறப்பட்டாச்சு
உதவிக்குப் பையன் வந்தான்
பத்து மூட்டைகளைக் கட்டி
பதவிசாய் முடித்து விட்டான்
பக்கத்து வீட்டார் சொன்னார்
பையன் நன்றாக முடிப்பதை
முடிச்சுப் போடுவது தப்பில்லை
அவிழ்ப்பதுதான் என்றேன் ! !

Thursday, January 29, 2009

திருமணப் பரிசு

எங்கே திருமணம் என்றாலும்

எப்போது இவள் போனாலும்

தப்பாது சின்ன கடிகாரம்

தகுதிக் கேற்ப இவள் கொடுப்பாள்

இங்கும் வரவேற்பு நடந்தது

இவளுக்கும் தோழியர் பரிசளித்தனர்

இருபது முப்பது கடிகாரங்கள்

இன்னும் பிரிக்க சில உள்ளன

ஏனென்று நாம் நினைக்கும்போது

நீ எதைக் கொடுத்தாய்

அதைப் பெறுவாய்

என்பது இதுவாக இருக்குமோ ?!

நன்கொடை

நல்ல நிகழ்ச்சிக்கு நன்கொடையாம்

பத்தாயிரம் அளிக்க அவன் நினைத்தான்

பத்திரிக்கை வர நாளாயிற்று

பாதி கொடுத்தால் போதுமேன்றான்

இரவும் பகலுமாய் இரண்டுநாளில் அது

இரண்டாயிரம் என்றான் மனைவி மூலம்

வருவதாக தொலைபேசியில் சொன்னார்கள்

இருப்பதைக் கொடுப்போம் வரட்டும் என்றான்

வந்தவர்களை எப்படி சும்மா அனுப்புவது

வந்த செலவுக்கு நூறு முடிவானது

Wednesday, January 28, 2009

வானத்தின் எல்லை

எல்லை இல்லா இறைவனுக்கு
எங்கு ஆரத்தி காட்டுவது ?
அல்லது வடிவம் கொடுத்தால் அங்கு
எல்லை மீண்டும் வருகிறது
எல்லாம் அவனே என்னும்போது
எதுவும் நமக்குப் புரிவதில்லை
தொல்லை துயரம் வந்தால் மட்டும்
தொழுதே வானத்தை நோக்குகிறோம் !


Tuesday, January 27, 2009

அன்பு மழை !

சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கிறது

சிலரைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லை

ஏன்? என்றாவது சிந்தித்ததுண்டா ?

உங்கள் அலைவரிசைக்கு அவர்கள் இல்லை

அவர்களை அனுசரிக்கும் நிலை உங்களுக்கில்லை

மழை நீரின் தூய்மை அதுவிழும் இடதைச்சாரும்

மனதில் அன்பு பொழியுமானால்

அது விழுமிடமெல்லாம் thooimai yaakum !

எதைச் செயதால எதைப் பெறுவாய் ?

அன்பு செலுத்த வில்லை

ஆதரவு காட்ட வில்லை

அடைக்கலம் கொடுக்க வில்லை

ஆபத்துக்கு உதவ வில்லை

துன்பம் துடைக்க வில்லை

துயரில் பங்கேற்க வில்லை

எல்லா இல்லையும் சரிதான்

தொல்லை இதில் என்னவென்றால்

எதுவுமே செய்யாத உனக்கு மட்டும்

எல்லாமே வேண்டுமென்றால் எப்படி ?!

நிம்மதி

நிம்மதி என்பது எங்கிருக்கு உன்
நினைவில் செயலில் தானிருக்கு
மற்றவர் தேவைக் குதவும் போது
மனதில் தோன்றும் நிம்மதி
பெற்றவள் சிரிப்பைக் காணும்போது
பெருகும் அங்கே நிம்மதி
உற்றவள் பிடித்ததை வாங்கும் போது
உனக்கும் அவளுக்கும் நிம்மதி
குற்றம் குறைகளைத் தள்ளும்போது
கூடும் வாழ்வில் நிம்மதி !!

திருந்துங்கள்

நல்லதை நினையுங்கள்
நினைத்ததைச் செய்யுங்கள்
செய்வதை முடியுங்கள்
முடிந்ததை த திருத்துங்கள்
திருத்தத்தில் திறுந்துங்கள்!

சக்தி பெறு சக்தி கொடு !

அனலும் புனலும் காறறிலுமே
அடங்கிக் கிடக்கும் சக்தியினை
அஷ்டாவதானம் செய்தாவது
ஆர்வமாய் மனிதன் திரட்டுகிறான்
அதற்குப் பெயரே " மின்சக்தி "
அது வந்தாலே இருள் விலகும்
இறை சக்தியை இறஞசிபெறு
இவ்வுலகம் அதனால் உயவடையும் !

Tuesday, January 20, 2009

ஏன மறுக்கிறாய்

ஏன மறுக்கிறாய்?

பரிசும் விருதும் பாராட்டும்

பார்ப்பவர்க் கெல்லாம் கொடுப்பதில்லை

உரிய தகுதி உடையவர்க்கே

உழைக்கும் கூலி கிடைக்கிறது

மற்றவரைப் பாராட்ட மறுப்பவர்கள்

மனதில் கள்ளம் குடியிருக்கும்

எறறைக்கும் மனதைத் துய்மை யாக்கு

எழில்மிகு வாழ்க்கை வரும் உனக்கு

என்னத்த சாப்பிட்டு என்ன ?

இனிப்பு சாப்பிட்டால்
இன்சுலின் போட வேண்டும்
உப்பு அதிகமானால்
உயர் ரத்த அழுத்தமாகும்
புளிப்பு என்றாலோ
பல் முழுதுமே கூசும்
கசப்பு சேர்த்தால்
கழுத்துக்குக் கீழ் போகாது
துவர்ப்பு உண்டால்
தொண்டை அடைக்கும்
காரம் வேண்டினால்
கண்டிப்பாக "அல்சராம்"
என்னத்த சம்பாரித்து
எதைத்தான் சாப்பிடுவியோ!?

Tuesday, January 13, 2009

தூக்கம் வருமா? ஏக்கம் தீருமா?

தலையைக் கீழே வைத்தவுடன்

தன்னை யறியாது தூங்குவது ஏன்

நினைத்துப்பார் உன்மனதில்

நிம்மதி யப்போது நிறைந்திருக்கும்

விலை கொடுத்தாலும் கிடைக்காது

வீண் அரட்டை கை கொடுக்காது

உடலும் மனதும் களைக்கும் வரை

உழைப்பவர் ரகசியம் அறிந்திடுவோம்

திவிர வாதம்





தீவிர வாதம்




அப்பாவி மக்களையே

தப்பாமல் சுட்டுக் கொல்ல

அணிவகுத்து வந்தது யாரு

மதமென்ற பெயராலே

மக்களை அழிககுமந்த

மாபாவிகளுக் கெந்த ஊரு

அண்டை நாடா இருந்தாலே

சண்டை நாடா இருக்குமென்ற

அவசியம் வந்ததென்ன கூறு

ஆதிக்க வெரியரெல்லாம்

அழிந்து பட்ட கதைகளையே

அமைதியாக நினைத்துக் கொஞ்சம் பாரு

வாயுக்கும் வயிற்றுக்கும்

வாதம் செய்யும் இளைஞருக்கு

தீவிர வாதத்தோடு நீ போட்ட சோறு

அமைதி அன்பு நேயத்திலே

ஆடி வரும் கங்கை யாறாம்

மானுடத்தில் நீ கலந்த சேறு

அல்லாவும் ஆண்டவனும்

அருட் தந்தை யேசுவுந்தான்

சேர்ந்து ஒன்றாய் வந்தால் இதுதீருமா

தீரும் வரை காத்திருக்க

தீவிரத்தை தாங்கி நின்று

திகழும் உயிர்கள் இங்கேதான் இருக்குமா /





Monday, January 12, 2009

பொங்கல் வாழ்த்து 2009

காடுகரை அலைய வேண்டாம்

கழனியில் கால் வைக்க வேண்டாம்

களத்தில் நெல் அடிக்க வேண்டாம்

கட்டிவெல்லம் வாங்க வேண்டாம்

இட்டமுடன் அரசு தரும் இலவசத்தில்

இனிய பொங்கல் படைப்போம் சரி

நட்டமின்றி நன்றி சொல்வது நாம்

ஆதவனுக்கா? அதன் சின்னத்துக்கா ?

பணம்...குணம்!


பணம்...குணம்!
பணம் காசு படைத்தவனுக்கு
பகல் இரவு தூக்கம் போச்சு
குணம் காத்து நின்றவனுக்கு
குறையில்லா வாழ்க்கை ஆச்சு
ஒன்று இருந்தால் ஒன்று இல்லை
இரண்டும் இருப்பதோ இறைவன் கருணை
நின்று நிதானித்து வாழ்க்கை நடத்து
நிச்சயம் இரண்டிலும் வெற்றி உனக்கு!!

Saturday, January 10, 2009

குலதெய்வம்


Tuesday, January 6, 2009

ஆபத்பாந்தவன்

ஆபத்து வந்ததென சொன்னவுடன்

அவநோடி வந்துமே உதவி நின்றான்

காபந்து செய்கின்ற கூட்டத்திலும்

கனிவாகப் பேசியே தனித்து நின்றான்

உயர்ந்த உள்ளதவன் யாரோவென

உதட்டைப் பிதுககினர் உறவினரும்

பிறர் அறியா ரகசியம் அவன் அறிவான்

'புரோநோட்டு காலாவதி ஆகுதென்று'