Saturday, May 31, 2008

எல்லாம் இறை மயம்

இறைவன் மனிதனைப் படைத்து விட்டான்

இப்படி வாழ் என்று சொல்லவில்லை

மனிதன் வாழ்க்கை நடைமுறையை

மறுபடி இறைவனைக் கேட்டதில்லை !

சாதிப்பு எல்லாம் தனது என்றான்

பாதிப்பு வந்தால் இறைவன் என்றான்

நீதிக்குப் புறம்பாகத் தான் நடந்தான்

சோ திப்பதெல்லாம் அவனே என்றான்

ஆணவத்தால் அவன் ஆடியாடி

அழிவையே நாடினான் ஓடியோடி

போனபின் வாழ்வையே தேடித் தேடி

புலம்பினான் விதியினைச் சாடிச்சாடி

மனதை வெற்றிட மாக்கி விட்டால்

மறுபடி இறைவன் குடிபுகுவான்

எனது உனது எதுவுமில்லை

எல்லாம் இறை மயம் ஆகிவிடும்

-வாசன்

Thursday, May 29, 2008



வணக்கம் அன்பு நெஞ்சங்களே


உங்கள் அனவரையும் வாசனின் வலைபூகளின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எனது அப்பா மற்றும் என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு
மீண்டும் சந்திப்போம்


சிவா