Friday, February 27, 2009

உதவும் கரங்கள் !

எல்லா மருத்துவ மனைகளையும்

இழுத்து மூடுங்கள்

வேலை வாய்ப்பு அலுவகங்களுக்கு

பூட்டுப் போடுங்கள்

அமத்தா பகவான் அப்பச்சி பகவான்

நில்லாமல் வாருங்கள்

நினைப்பதற்கு மேல் பலமடங்கு

கைமேல் பலன் காண

சந்தேகம் இருப்பவர்கள் எங்களை

சந்தித்தவர்களை கேட்கலாம் ! !

Thursday, February 26, 2009

காதல் கலக்கல் !

குடை பறக்க கோழி பறக்க
குப்பைக்குள்ளே குமரி பறக்க
குறுந்தாடி வேந்தன் மனம் பறக்க
குதூகலிக்கும் தென்னை மரங்கள் !




ரோஜாவின் கள்ளம் !



உள்ளம் கவர்ந்த ரோஜாச் செடி
மஞ்சள் ரோஜாவைப் பறிக்கும் விரல்
முள்ளைக் குத்திக் கொண்டது அதனால்
கிள்ளிப் பறித்த பூவின் நிறம்
மஞ்சள் பாதி சிவப்பு பாதியுமாய்
கள்ளச் சிரிப்பு சிரிக்கின்றது ! !

முடிந்தால் சிரிக்க !

மகனுக்கு அறிவுமதின்னு பேர்வைச்சது
தப்பாப் போச்சு ...
ஏன்.... சலிச்சுக்கிறீங்க ?
அட .. பின்னே என்னங்க தினசரி யாராவது
வீட்டுக்கு வந்து ' அறிவு ' இருக்குதான்னு
கேட்டிட்டுப் போறாங்க ...! !

எரிவாயு எரிக்கிறது ! !



அஞ்சல் அட்டை வாங்க அரைமணி
பார்சல் அனுப்ப பலமணி நேரம்
பதிவுத் தபால் எழுத்தர் விடுப்பு
பக்கத்து இருக்கை அவருக்குப் பகை
படுத்தி எடுத்த அஞ்சல் துறை இன்று
பலசரக்கும் பயணச்சீட்டும் விற்கிறது
ஐம்பது காசுக்குப் பேசு தொலைபேசி
அறைகூவிக் கூட்டம் சேர்க்கிறது
ஒரு நாள் எரிவாயு ' தெருவினில் கூவும் '
மறுநாள் வா...என நாம் சொல்லப்போகிறோம் ! !

Tuesday, February 24, 2009

இரண்டடி உயர இசை மேதை !



இயற்கையின் படைப்பில் விதிவிலக்காவார்
இருகால் கைகள் இவருக்கில்லை
வயது நாற்பத்தி ஐந்தானாலும்
வளர்ந்தது இரண்டடி மட்டுமேயாகும்
கர்னாடக சங்கீதக் கச்சேரி செய்வார்
கனிவாகப் பல மொழி பேசி எழுதுவார்
இடது கன்னம் தோள் இடையில்பென்சில்
இவர் வைத்து எழுதும் அழகே தனிதான்
குடியரசு தலைவர் முன் கச்சேரி செய்தார்
" குறையொன்றுமில்லை "பாடலைப் பாடினார் !

Tuesday, February 17, 2009

எது ஆன்மீகம் ?

கோயிலுக்கு விளக்கேற்ற
கொண்டு செல்லும் எண்ணை
மீதமிருந்தால் வீட்டுக்கு
எடுத்து வரலமா ?

வரலாம்

வெள்ளிக்கிழமை வீட்டில்
அம்பிகைக்கு விளக்கேற்றலாமா ?

ஏற்றலாம்.

பல் விளக்கினால் பச்சைத் தண்ணியில்
வாய் கொப்பளிக்கலாமா ?
பஜனையில் பாடத்தெரியாதவர்
பாடலாமா ?
ஆடிவெள்ளி அம்பாசமுத்திரத்தில்
குளிக்கலாமா ?

வர வர பொது அறிவே
போய்விட்டது போங்கள் ! !



குழந்தைத் தொழில் !


குழந்தை கையில் பனங்காயாம்

குறுகுறுப்பான பார்வை எங்கே ?

பள்ளிச் சீருடை சிறுமி கண்டு

பரிதாபத்தில் அவன் முகமாம்

பேசும் பொற் சித்திரம்

பேசாத ஊமையாய்

காசுக்கு வேலை செய்து

கடன் கழிக்கும் அவலமிது ! !

மைக் டெஸ்டிங்க் !


பந்தல் அலங்காரம் பதாகை தோரணம்
பந்தாவாக எல்லாம் தயார் நிலை
கூட்டம் ஆரம்பிக்க தாமதம் ஆயிற்று
அமைதி காக்க அறிவிக்கச் சென்றவன்
'மைக்டெஸ்டிங்க்' என்று சொல்லாமல்
" ஒன்...ட்டூ...த்ரீ...யென்று சொன்னவுடன்
எப்போது என்று காத்திருந்த மக்கள்
எல்லோரும் எழுந்து ஓடிவிட்டனர்! !

Sunday, February 15, 2009

ஆனந்தம் உன் இயல்பு ! !


ஆனந்தம் உன் இயல்பு ! !
ஆனந்தம் என்பது கடைச் சரக்கல்ல

அது உன் உள்ளத்து உணர்வே ஆகும்

ஏனந்த இயல்பை மறந்து மறந்து விட்டாய் ?

எதிர்மறை விளைவால் ஏங்குகிறாய்

தீதும் நன்றும் பிறர் தருவதல்ல

தீமையும் நன்மையும் உன் படைப்பாகும்

சூதும் வாதும் வேதனை செய்யும்

சூழ்நிலை மாறத் துணை உன் உழைப்பு

உண்மை பேசு உழைப்பை நாடு

உள்ளத்துக் கள்ளம் உதறித்தள்ளு

Friday, February 13, 2009

படியில் பயணம் மடியில் மரணம் ! !

பேருந்தில் தொங்கிப் போவது

பெரியதோர் சாதனைதான்

கால் பாத இடம் கைவிரலின் பிடி

காற்றின் வேகத்துக்குப் பறக்க வேண்டும்

ப்றப்பவர் மனம் கிக்....கிக்...கிக்

பார்ப்பவர் நெஞ்சு திக்...திக்...திக்

பெற்றோர் உள்ளம் பக்...பக்...பக்

பெற்றத்தின் சிரிப்பு எக்...எக்...எக் ! !

கப்பலின் வரிசை கண்கொள்ளாக் காட்சி ! !


பாய்மரக் கப்பலின் அணிவகுப்பு

பார்க்க வருவோர்க்கு பெரும் வியப்பு

மாய வித்தையென ஜொலி ஜொலிப்பு

மயக்கும் வண்ணங்களில் ஒளியமைப்பு !


குறுக்கு வழியில் இலக்கை அடைய

க்ற்றுக்கொடுப்பது பள்ளியிலா ?

குற்றம் என்று தெரிந்தே போவது

கூற்றுவன் வழியெனத் தெரியாதா?

இருப்புப்பாதை கடப்பது ஆபத்து

இரயில் வரும்போது இரட்டிப்பாகும்

மறுமை நோக்கிப் பயணம் எதற்கு

மாற்று வ்ழியை யோசித்துப் பாரு!!

Tuesday, February 10, 2009

உவகையின் உச்சம்

நீலநிற நீர் நிலையில்

நீந்துகிற மனித மீன்கள்

ஆலமென நீர்ச்சிதறல்

அதில் நனைய வரும் கூட்டம்

ஏலத்தில் வந்த மகிழ்ச்சி

எடுத்தவர் அடிக்கும் " பல்டி "

கோலத்தைக் கண்டு ரசிக்க

கோடிகண் வேண்டுமம்மா ! !
தெருச்சண்டை

கொடியோடும் தடியோடும்

வந்தவர்கள் கொள்வது

தெருச்சண்டை யாரென்றால்

சட்டத்தில் பட்டம் பெற்றவர்களும்

சத்தியாக்கிரகத்தின் வாரிசுகளுமாம் ! !

Monday, February 9, 2009

போட்டால் சத்தம் பெரிதாகும்


குடிக்காதே குடிக்காதே போராட்டம்

குடிப்பது உடல் நலக் கேடாகும்

போராட்டம் நடத்துகிற மகளிரணி

போட்டால்தான் சத்தம் பெரிதாகும்

பேரொலியில் கோரியது அமுலாக்கம்

பேசவே முடியாத தொண்டைக் கட்டு

உடைக்க எடுத்த பாட்டிலை " உள்ளே "

போட்டு உடைத்தால் தப்பென்ன ?

Sunday, February 8, 2009

தெப்பத் தேர் !


வண்ண வண்ணத் தண்ணீரை
வந்து பாருங்க வண்டியூர்
மாரியம்மன் தெப்பக்குளம்
வண்ண ஜாலம்
செயயுதுங்க
எண்ணமெல்லாம் இறைத்தன்மை
நிலைக்கச செய்யுங்க
எப்போதும் வாழ்வில் ஒளி
எய்து மகிழுங்க ! !

படியளக்கிறான் சொக்கன் (மதுரை படியளக்கும் திருவிழா)

விலைவாசி உயர்வு விண்ணைத் தொட்டது


கச்சா எண்ணையே கருவியாயானது


மலைபோல் விளைந்த பொருள்களெல்லாம்


மாயமாய் மறைந்து எங்கு போனது?


தலைக்கு தலை விலையை ஏற்றி


தவிடெல்லாம் தங்கத்தின் மதிப்பானது


நிலை குலைந்த மனிதனுக்குப் படியளந்து


நிம்மதியைத் தருகின்றான் சொக்கன் இன்று.




அரசியல்


ஓட்டு இலவசம் 1
உடை இல வசம் வீ ட்டு மனை இலவசம்

நிலப்பட்டா இலவசம் இடுபொருளுமிலவசம்


அரிசி கிலோ இரண்டு ரூபாய்


மளிகைப் பொருள் மலிவு விலை

ஆக்குவதற்கு அடுப்பு இலவசம்

வெளிச்சத்துக்கு மின்விளக்கு இலவசம்

பார்த்து பகுத்தறிவை வள்ர்க்க

வண்ணத் தொலைக்காட்சி இலவசம்

குடும்பம் மலர திருமணம் இலவசம்

கூடுதலாகக் கேட்பதும் இலவசம்

இத்தனை இலவசம் வாங்குபவர்

ஓட்டை இலவசமாய்
போட்டால் என்ன ?!

Friday, February 6, 2009

திருவாதிரை சீர் மற்றும் பொங்கல் சீர்






































  1. கும்பகோணம் திருவாளர்கள் SKRS.முத்துக்குமரன்,SKRC.ரத்தினசபாபதி,சந்திரசேகரன் குடும்பத்தினர எர்ணாகுளம் திருவாளர்கள் ARCR.பொன்னம்பலம்,சீனுவாசன் குடும்பத்தினர்க்கு . திருவாதிரை சீர் மற்றும் பொங்கல் சீர் வழங்கும் நிகழ்ச்சிகள் கடந்த ஜனவரி பத்து மற்றும் பதினான்காம் தேதியில் நடைபெறறன . சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
சரி என்பதே ...சரி
வேண்டாதவர் செய்தால் வெறுப்பு
வேண்டியவர் செய்தால் உவப்பு
மறறவர் பேசினால் அறுவை
நீங்கள் பேசும்போது அறிவுரை
நீங்கள் ஏற்பது எதுவானாலும்
அது சொர்கமாகிவிடும்
நீங்கள் எற்கமறுக்கின்ற்போது
அதுவே நரகமாகிவிடும்!
நல்லவர்களுக்கு நாளெல்லாம் இனிப்பு
அல்லாதவர்களுக்கு நாளும் க்சப்பு
எல்லாமே இருப்பது உங்கள்கையில்
உங்கள் தேர்வு இனிப்பா ?கசப்பா ?

Tuesday, February 3, 2009

அறுவை !

பிரதமர் அறுவை சிகிச்சை முடிந்து

வீட்டிற்கு வந்து விட்டாராமே ?

அவர் இதைப்போல் எத்தனை

" அறுவை"களைப் பார்த்திருக்கிறார் !!

யாதும் ஊரே யாவரும் கேளிர்

அலுவலக நண்பர் இனிப்பு வழங்கினார்
ஆசையுடன் எடுத்துகொணட இவர்
அமெரிக்காவுக்குப் பாடுபட வீட்டில்
ஆண்பிள்ளை பிறந்திருக்கிரானாமே
கைகுலுக்கி " கங்கிராட்ஸ்" என்றார்
வாழ்கையின் லட்சியம் வழிதவறவில்லை !!

எல்லோரும் இந்நாட்டு முதல்வர்கள்

நடித்தது பிடித்தது என்றால்
நாலுமுறை படம் பார்த்து ரசி
நல்லவனாக வருகிறார் என்றால்
அந்த கதாபாத்திரம் அப்படி
நடிகருக்கு ரசிகர் மன்றம் சரி
நாட்டையே தருவதென்றால் எப்படி
நாடாளுமன்றம் ரசிகர் மன்றமானால்
நல்லதான்னு கொஞ்சம் செப்பண்டி!!

பழமையும் புதுமையும்

பழமையின் பழக்கம் எதுவென்றாலும்

பயத்தில் ஏற்பது அழகல்ல அதன்

பொருளை நன்றாய்ப் புரிந்துக்கொண்டு

போற்றவும் அகற்றவும் செய்துவிடு

அறிவியல் முன்னேற்றம் அடையா நாளில்

ஆளைதொட்டால் தீட்டு என்றார்

நெறிமுறை வாழ்வில் தவறிவிட்டு

நேர்த்திக்கடனதான் வழி என்றார் !
அன்றைய சூழல் அன்றைய வாழ்வு
அதில் ஒருபடி மேலுள்ளது இன்று
சென்றைய நாளை தொங்கிக்கொண்டு
சேற்றில் நடப்பது என்ன பயன்
பழமையைப் புரிந்து கொள்
புதுமையை ஏற்றுக் கொள்
பாமரத் தன்மைக்கு விடை கொடு
பட்டறிவின்படி முடிவெடு !!

Sunday, February 1, 2009

ஆக்ரமிப்பு

ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன
அறிக்கையும் அனுப்பப்பட்டது
அடுத்து யாருக்கு எந்த இடம்?
அரசியல் தலைவரைக்
கேட்டால்தான் தெரியும்!!

பெருசு கொஞ்சம் நகரு 1

விதை பிளக்கிறது முளை வருகிறது
முளை வளர்கிறது செடி உயர்கிறது
செடி பூக்கிறது பூ காய்க்கிறது
காய் கனிகிறது கனி விழுகிறது
கனியின் விதையில் காலம் சுழல்கிறது
மனிதனின் இயற்கை சக்கரமும் இதுதான்
ஆனால் பழுத்த மனிதனுக்குப் பட்டம் "பெருசு"
பழுத்தோலை பார்த்து குருத்தோலை சிரிக்கிறது!!