
வைகைக் கரையில் வைகறை வேளை
வீசும் தென்றல் விழிதனை வருட
மையிருள் விலக மறைந்தது தெரிய
மதுரைக் கோபுரம் வா....வென்றழைக்க
மெய்யது சிலிர்த்து மேகமாய் நகர்ந்து
பையவே நடந்து பக்கத்தில் சென்று
கையது கூப்பிக் கண்ணது கசிந்து
கண்டேன் மீனாக்ஷி அன்னையை நானே !














