
திருக்குற்றாலம் !
சாரல் நனைக்கும் சங்கதி பாடும்
ஆரல் துள்ளும் அழகு சிரிக்கும்
ஊரல் பறக்கும் உள்ளம் களிக்கும்
வேரல் நுனி நீர் வேதம் சொல்லும்
மானின் பாச்சல் மந்தியின் தாவல்
கானல் மயிலின் களிதரு நடனம்
வானத்து கங்கையாய் வழிந்திடும் அருவி
சீனத்து மத்தாப்பாய சிதரிடும் மாட்சி
மண்ணும் மணக்கும் மரமும் மருவும்
விண்ணும் ஒழுகும் விரகம் தீர்க்கும்
கண்ணும் குளிரும் காட்சிகள் மாறும்
பண்ணும் இசைக்கும் பரதம் பிறக்கும்
மயக்கும் மாருதம் மலர்களைத் தழுவும்
மயங்காத வண்டுகள் ரீங்காரம் பாடும்
இயற்கையின் சிரிப்பை இசைந்தே காண்பாய்
இயல்பாய் வணங்கு இறைவன் அருள்வான்!
No comments:
Post a Comment