Tuesday, January 13, 2009

திவிர வாதம்





தீவிர வாதம்




அப்பாவி மக்களையே

தப்பாமல் சுட்டுக் கொல்ல

அணிவகுத்து வந்தது யாரு

மதமென்ற பெயராலே

மக்களை அழிககுமந்த

மாபாவிகளுக் கெந்த ஊரு

அண்டை நாடா இருந்தாலே

சண்டை நாடா இருக்குமென்ற

அவசியம் வந்ததென்ன கூறு

ஆதிக்க வெரியரெல்லாம்

அழிந்து பட்ட கதைகளையே

அமைதியாக நினைத்துக் கொஞ்சம் பாரு

வாயுக்கும் வயிற்றுக்கும்

வாதம் செய்யும் இளைஞருக்கு

தீவிர வாதத்தோடு நீ போட்ட சோறு

அமைதி அன்பு நேயத்திலே

ஆடி வரும் கங்கை யாறாம்

மானுடத்தில் நீ கலந்த சேறு

அல்லாவும் ஆண்டவனும்

அருட் தந்தை யேசுவுந்தான்

சேர்ந்து ஒன்றாய் வந்தால் இதுதீருமா

தீரும் வரை காத்திருக்க

தீவிரத்தை தாங்கி நின்று

திகழும் உயிர்கள் இங்கேதான் இருக்குமா /





Monday, January 12, 2009

பொங்கல் வாழ்த்து 2009

காடுகரை அலைய வேண்டாம்

கழனியில் கால் வைக்க வேண்டாம்

களத்தில் நெல் அடிக்க வேண்டாம்

கட்டிவெல்லம் வாங்க வேண்டாம்

இட்டமுடன் அரசு தரும் இலவசத்தில்

இனிய பொங்கல் படைப்போம் சரி

நட்டமின்றி நன்றி சொல்வது நாம்

ஆதவனுக்கா? அதன் சின்னத்துக்கா ?

பணம்...குணம்!


பணம்...குணம்!
பணம் காசு படைத்தவனுக்கு
பகல் இரவு தூக்கம் போச்சு
குணம் காத்து நின்றவனுக்கு
குறையில்லா வாழ்க்கை ஆச்சு
ஒன்று இருந்தால் ஒன்று இல்லை
இரண்டும் இருப்பதோ இறைவன் கருணை
நின்று நிதானித்து வாழ்க்கை நடத்து
நிச்சயம் இரண்டிலும் வெற்றி உனக்கு!!

Saturday, January 10, 2009

குலதெய்வம்


Tuesday, January 6, 2009

ஆபத்பாந்தவன்

ஆபத்து வந்ததென சொன்னவுடன்

அவநோடி வந்துமே உதவி நின்றான்

காபந்து செய்கின்ற கூட்டத்திலும்

கனிவாகப் பேசியே தனித்து நின்றான்

உயர்ந்த உள்ளதவன் யாரோவென

உதட்டைப் பிதுககினர் உறவினரும்

பிறர் அறியா ரகசியம் அவன் அறிவான்

'புரோநோட்டு காலாவதி ஆகுதென்று'

Wednesday, December 31, 2008

2009 ஐ வரவேற்ப்போம்


நாடு செழிக்கட்டும் நன்மைகள் மலரட்டும்

நலமே வருமென்ற நம்பிக்கை வளரட்டும்

ஓடும் நதியெல்லாம் ஒருங்கிணைப்பு ஆகட்டும்

ஒருமித்த கருத்துக்கள் ஓங்கிப் பெருகட்டும்

பாடும் அலையெல்லாம் பாரதத்தின் புகழ் பாடி

பாரினில் வல்லரசாய் பாங்குடன் உயர்த்த வரும்

ஈடு இணையற்ற இரண்டாயிரத்து ஒன்பதை

இனிதே வரவேற்ப்போம் இறைவன் துணை வருவான்.

Thursday, December 25, 2008

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


டியர் ஆதித்யா,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்



Send this eCard !



அன்புள்ள ,
பாட்டி,
மாமா & அத்தை
ராமு & பிரபா

Friday, December 19, 2008

மீனாக்ஷி அன்னை !


வைகைக் கரையில் வைகறை வேளை
ீசும் தென்றல் விழிதனை வருட
ையிருள் விலக மறைந்தது தெரிய
துரைக் கோபுரம் வா....வென்றழைக்க
மெய்யது சிலிர்த்து மேகமாய் நகர்ந்து
பையவே நடந்து பக்கத்தில் சென்று
ையது கூப்பிக் கண்ணது கசிந்து
கண்டேன் மீனாக்ஷி அன்னையை நானே !


Saturday, December 6, 2008

Marriage video_0001.wmv

marriage video

Friday, November 28, 2008

Namasivayam Vaalka


நமசிவாயம் வாழ்க என்ற நூல் eழுதிய திரு . சீனிவாசன் அவர்களுக்கு திருவாசக செல்வர் என்ற விருதினை நீதியரசர் திரு .க.ஞானப்பிரகாசம் வழ்ங்கினார் .அதன் காட்சியினை காண படத்தில் உள்ள play button (arrow mark) கிளிக் செய்யவும்.

நூலினை முழுவதும் படித்து பயன் பெற கீழ் கண்ட லிங்க்கினை கிளிக் செய்யவும்

http://sites.google.com/site/modernsiva/namasivayam--vaalka

Saturday, November 1, 2008

எங்கள் வீட்டு தீபாவளி

கடந்த தீபாவளியை எங்கள் வீட்டில் சிறப்பாக கொண்டாடிநோம்.அதன் வீடியோ காட்சிகள் உங்கள் பார்வைக்கு

Saturday, October 18, 2008

கோவையில் ஒரு கொலு




கோவையில் எனது சித்தி வீட்டில் சென்ற வாரம் நடை பெற்ற கொலுவின் ஒரு சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.

Wednesday, October 15, 2008

Reception video

Hello all
This video taken in my reception in 1995
Hope all of you may enjoy

Thursday, October 9, 2008

Tuesday, October 7, 2008

Navarathiri kolu 2008

vanakkam
yengal veetu koluvai kandu rasiyungal

Monday, September 22, 2008

வீடு அல்லது நிலம் வாங்கும் போது

நீங்கள் வீடு அல்லது நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில உபயோகமான டிப்ஸ் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்தால் கிடைக்கும்.
படித்து பலனடையுங்கள் .
http://sites.google.com/site/modernsiva/land-purchase-tips

Tuesday, September 9, 2008

அன்புடையீர்

ராமாயணம் எளிய தமிழில் எழுதியுள்ள திரு.கே.ஏ.சீனிவாசன் அவர்களின்
படைப்பினை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் .
புத்தகத்தினைப் படிக்க கீழ்க் கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்

http://sites.google.com/site/modernsiva/welcome











Friday, September 5, 2008

புனித கைலாய யாத்திரை !


புனித கைலாய யாத்திரை


கோவை எனது பெரியம்மா திருமதி பா .சாந்தகுமாரி அவர்கள் கடந்த ஆகஸ்ட் பதினான்கு அன்று திருக்கைலாய யாத்திரை புறப்பட்டு சென்று சிவபெருமானின் திருவருளால் கைலாய தரிசனம் பெற்று செப்டம்பர் ஒன்றாம் தேதி நலமுடன் திரும்பினார்கள் .அவர்களை நாமும் வணங்கி ஆசி பெறுவோம் .


இப்படிக்கு
மதுமதி ரத்தினசபாபதி




Thursday, August 7, 2008

நன்றி

அன்புடையீர்

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் உரித்தாகுக.
விரைவில் பல புதிய பகுதிகள் வர இருக்கின்றன.
மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்
சிவப்பிரகாசம்

Saturday, August 2, 2008

Free Web Counters

Free Counter